கிளானை இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. இந்த இணையத்தளம் ஊடாக  கிளானை கிராம நிகழ்வுகள், செய்திகள், படங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், மற்றவர்கள் எமது கிராமத்தைப்பற்றி அறிந்து கொள்ளவும் உபயோகமாக இருக்கும்.

பச்சை பசேல் என்று எங்கும் காட்சியளித்த கிளானை யுத்த சூழ்நிலையால் 1990 இன்  பின்னர் முற்றாக வெற்று  நிலமாக ஆக்கப்பட்டது, வீடுகள், கட்டிடங்கள்  அழிக்கப்பட்டன, விவசாய நிலங்கள் காடுகளாக்கப்பட்டன. வைரவர் கோவிலும் சேதமாக்கப்பட்டு இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.

யுத்த சூழ்நிலையால் எமது உறவுகள் கிராமத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு திசைகளில்  பரவி வாழ நேரிட்டது . 2010ஆம் ஆண்டின் பின்னர் கிளானை  மக்கள்  மீழ்குடியேற சூழ்நிலை நிலவியது, இதன் பின்னர்பெரும்பாலான கிராமத்தவர்கள்  மீண்டும் மீழ்குடியேறி தமது சொந்த இடங்களை மீண்டும் விளைநிலமாகவும், வீடுகளை கட்டியும், தமது இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.குறிப்பாக ” காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே”  எமை காத்தருளும் (எமது ஊரைக் காத்தருளும் ) எமது ஞான வைரவர் ஆலையம் ஊரவர்களின் உதவியுடன் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

எனக்கு கிடைக்கப்பெற்ற படங்கள் மற்றும் செய்திகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த இணையதளத்தை மேலும் மெருகூட்ட உங்களின் உதவிகள் தேவை, உங்களிடம் இருக்கும் கிளானை பற்றிய  கட்டுரைகள், படங்கள் ஒளிநாடாக்கள் செய்திகள் எதுவானாலும் எமக்கு அனுப்பி வைக்கவும். எமது ஊரின் பழமையையும் பாரம்பரியத்தையும்  காப்பது எமது  கடமைகள் ஆகும்.