கிளானை ஞான வைரவர்  ஆலயம்

 

 

கிளானையில்  வீற்றுஇருக்கும் ஞான  வைரவர் ஆலைய வரலாற்றை 21.06.1988 ஆம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் ஆசிரியர் க. துரைரத்தினம் அவர்களினால் எழுதி வெளியிட்ட “மாவை கிளானை ஞான வைரவர் ஆலய வரலாறு”  2014 ஆண்டு கும்பாபிஷேக மலரில் மறுபதிப்புச் செய்யப்பட்டது, அதில் இருந்து பெறப்பட்டதே இந்த வரலாற்று தொகுப்பு. இதில் பிழைகள் யாதும் இருப்பின் பொருத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வரலாற்று தொகுப்பு நீண்ட பதிப்பாக இருப்பதால் இதை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளோம்.

 

கிளானை ஞானவைரவர்  ஆலய வரலாறு

இந்தியாவிலுள்ள பல புண்ணிய தலங்களைத் தரசித்தும் தனக்கு ஏற்பட்ட நோய் நீங்கப்பெறாத சோழ அரசியாகிய மாருதப்புரவீகவல்லி ஈழத்திற்கு வந்து, வடபாலமைந்த கோவிற் கடவையில் ஓரூராகிய கீரிமலையின் கண் தவஞ் செய்த நகுல முனிவரைச் சந்தித்து, அவரது ஆசியுடன் கீரிமலைத் தீர்த்தத்தில் நீராடி நகுலேஸ்வரப் பெருமானை வணங்கியதால் தனது மாமுக நோய் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு கண்ட உண்மையாகும்.

நோய்  நீங்கிப் பேரழகு பெற்றதனால் அகமகிழ்ந்த அவ்வரசி இந்தியாவிலிருந்து காங்கேயன் விக்கிரத்தை வரவழைத்துக் கோவிற்கடவையின் இன்னொரு கிராமத்தில் ஆலயம் அமைத்துக் காங்கேசனைப் பிரதிஷ்டை செய்தார்.    மாருதப்புரவீகவல்லியின் மாமுகம் நீங்கியதால் கோயிலைச் சூழவுள்ள பகுதிக்கு மாவிட்டபுரம் என்ற பெயர் விளங்கலாயிற்று. அக்காலத்தில் கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறை ஆகிய கிராமங்களைச் சூழவுள்ள பிரதேசம் “கோவிற் கடவை” என்ற பெயரினால் அழைக்கப்பட்டது. கோவிற் கடவையின் ஒரு பகுதியாகத் திகழ்வது கிளானை என்னும் கிராமமாகும் இன்றைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கிளானைப்  பகுதியில் எழுந்தருளிய இறைவனே தற்பொழுது “கிளானை ஞானவைரவர் “என் அழைக்கப்படும் அற்புதத் தெய்வமாகும்.

கொல்லங்கலட்டியில் வாழும் காசிநாத உபாத்தியாயரின் தந்தையாரின் பெயர் ஆறுப்பிள்ளை. இவரை ஆலோசனை ஆறுப்பிள்ளை  என்றும் அழைப்பர். ஆறுப்பிள்ளை என்பரின் தாயாரின் பெயர் சீதேவன்பிள்ளை. சீதேவன் பிள்ளையின் சகோதரியின் பெயரி சின்னாச்சிப்பிள்ளை. பழவீட்டார் குடும்பத்தினருக்கும் விவாகத் தொடர்பு காரணமாக உறவுமுறை ஏற்றபட்டது. எமது ஆலயமும் பூசகர் வாழும் வீடும் அமைந்திருக்கும் நிலம் இரு குடும்பத்தவர்க்கும் சொந்மானது. வைரவர் பெருமானைப்பூசிக்கும் பூசகர் வாழும் வீடும் அந்தத் தர்மசொத்தில் வாழ்பவராக இருக்க வேண்டும் என்பது தர்மசொத்து அளித்தவர்களின் நிபத்தனையாகும். தற்பொழுது கோயில் அமைந்துள்ள பகுதி இற்றைக்கு  நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த  பற்றைகள், மரங்கள் நிறைந்த காடாக காட்சியளித்தது. ஆனால் அங்கு வானளாவ உயர்ந்த பனைமரங்கள் நின்றன. காணிச் சொந்தக்காரர் காணிக்கு வரும் பொழுது ஏற்படும் அச்சத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு கொன்றை மரத்தின்கீழ் சூலத்தை வைத்து வழிபட்டு வந்தனர். பனம்பழம் பொறுக்க வந்த அக்குடும்பத்தினர்க்குப் பாதுகாப்பாக இருந்து அருள் புரந்தவர். அச்சூலத்தில் எழுந்தருளிய வைரவப் பெருமானாகும் வைரவப் பெருமானுக்குக் கோயிற் சொத்தாகப் பெருங்காணியை வழங்கியுள்ள அக்குடும்பத்தவர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஊர்ப்பிரமுகர்கள் வேண்டியும் எதுவித முன்னீட்டிற்கும் நிற்காது  ஒதுங்கியமை அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகின்றது.சூலம் அமைந்திருந்த நிலத்திற்கு அண்மையிலுள்ள நிலங்களிற் சிலர் குடியேறத் தொடங்கினர்.

தற்பொழுது ஆலயம் அமைந்pருக்கும் இடத்திற்கு முன்னாலுள்ள நிலத்தில் காட்டர் கந்தையா என்பவரின் தந்தையராகிய கதிரிப்பிள்ளை என்பவரும் அவரது சுற்றத்தவர்களும் குடியேறினர். கொன்றை மரத்தின்கீழ் சூலத்தில் எழுந்தருளிய வைரவப் பெருமானுக்குக் கூரை அமைத்து அரைச்சுவரும் எழுப்பப்பட்டது. வைரவப் பெருமாள் மீது மட்டற்ற பக்தி மேற்கொண்டர். நெடுங்காலம் வரை பொங்கல் வழிபாட்டின் போது முதற் பொங்கள் பானையை வைப்பவர்கள் இவர்கள் வம்சத்தினராகவே வழங்கி வந்தது. பின்புபூசகரே முதற்பானையை வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தற்பொழுது கோயிலில் இருந்து சிறிது தூரத்தில் வாழ்ந்து வருவதுடன் வழிபாட்டைக் கைவிடாது வருடாவருடம் நடைபெறும் அலங்கார உற்சவங்களில் ஒற்றையும் செய்து வருகின்றனர்.

பூசகர் வரலாறு:

வைரவப் பெருமானின் அருட்கருணை பெற்ற அக்காலத்து அன்பர்கள் வைரவரைப் பூசிப்பதற்காக வீரசைவகுலத்துப் பூசகரை நியமித்னர். கோயிலுக்குப் பூசை செய்ய நேர்ந்ததால் பூசகர் குடும்பத்தினர் கோயிலுக்கு பூசை செய்ய நேர்ந்ததால் பூசகர் குடும்பத்தினர் கோயிலுக்கு முன்னால் உள்ள தருமசொத்துக்காணியில்குடியேறினர். சூலத்தில் எழுந்தருளிய ஞானவைரவப் பெருமானை முதன்முதலில் பூசிக்கும் போற்றினைப் பெற்றவர் அனந்தர் என்னும் நாமத்தை உடைய பூசகர் ஆவர். அவரது காலத்தின் பின்அவரது மகன் கந்தவனம் என்பவர் பூசகராக விளங்கினார். அவரது சகோதர் ஒருவர் ரங்கூன் நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டு பெருந்தனவந்தகரானதால் ரங்கூன் என்ற அடைமொழியினால் அழைக்கப்பட்டார். கந்தவன ஐயரின் கூத்த மகளாகிய முத்துப்பிள்ளை என்பவரின் இரண்டாவது புத்திரராகிய சுப்பிரமணிய(தம்பிரான்) ஐயர் இக்காலத்தில் சடச்சப்பைப் பகுதியில் எழுந்தருளியுள்ள வைரவப் பெருமானுக்குப்பூசை செய்து வந்தார். தம்பிரான் ஐயரின் தந்தையின் பெயர் கந்தவனம். தம்பிரான் ஐயரின் குடும்பத்தினர் சடச்சப்பை அலயத்துப் பூசைப் பொறுப்பைக் கவனித்து வந்தாலும் அவர்கள் கிளானை வைரவரின் தர்மச் சொத்துக் காணியிலேயே வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் அர்ச்சகராக இருந்த ஐயாத்துரைஐயர் கிளானையை விடுத்து வேறூரில் குடியேற நேர்ந்ததால் தர்ம சொத்து அவளித்தவர்களின் நிபந்தனைக்கு அமைய எமது ஆலய தர்மசொத்தில் வாழ்ந்து வந்த தம்பிரான் ஐயருக்கு எமது ஆலயத்திலும் பூசை செய்யும் வாய்ப்புக் கிட்டியது

 

தம்பிரான் ஐயர் பூசகராக இருந்தகாலம் எமது ஆலய வரலாற்றில் மிகவுஞ் சிறப்ப வாய்ந்தகாலமாகும். அவரும் அவரது தர்ம பத்தியான சிவக்கொழுந்து அம்மாவும் வைரவப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். அழகிய தோற்றமுடைய ஆசாரசீலராகிய அவரைக் காண்பவர்கள் யாவரும் வைரப் பெருமானைத் தரிசித்தது போன்று நிறைவெய்துவர். இப்போதுள்ளது போல் அவர்களது காலத்தில் பூசகருக்கு வேதனம் ஒன்றும் வழங்கப்படவில்லை. இருந்தும் வைரவர் கடாட்சத்தினால் அவர் வாழ்க்கையில் முன்னேறியதுடன் வைரப் பெருமானை வணங்குவோரையும் உயர்வடையச் செய்தனர்.அவர் மந்திரித்துக் குழந்தைகளுக்கு விபூதி அணிவாராயின் தீராத நோய் தீரும்.

 

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் பூசை செய்து வந்த தம்பிரான் ஐயர் தமது தள்ளாமையின்காரணமாகப் பூசை செய்ய இயலாத நிலை ஏற்பட்ட பொழுது கிளானை வாழ் மக்கள் யாவரும் 11.04.1979 அன்று ஒன்றுகூடி ஆலயத்தைப் பரிபாலிப்பதற்கென ஒரு நிர்வாக சபையைத் தெரிவு செய்ததுடன் மகப்பேறு இல்லாத தம்பிரான் ஐயர் அவர்களுடன் வாழ்ந்து வந்த ஐயரின் பெறாமகள் (ஐயம்பிள்ளை குருக்களின் மகள்) ஆகிய விமலாதேவியின் கணவர் செல்வரத்தின ஐயரைப் பூசகராக நியமித்தனர். செல்வரத்தின ஐயரே தற்பொழுதம் பூசகராக இருந்து ஆலயத்தைப் புனிதமாகப் பேணிவருகிறார்.