கிளானை ஞான வைரவர் அறநெறி பாடசாலை
கிளானை, கொல்லங்கலட்டி
இலங்கை அரசாங்கத்தின் இந்து கலாச்சார அமைச்சின் மூலம் மாணவர்களின் ஒழுக்கம், சமய விழுமியம் போன்றவற்றை கட்டிக்காக்கவும் மாணவர்களின் தகாத பழக்கங்களிருந்து மீட்க அறநெறி கல்வியே உகந்ததென கலந்த 30 வருடமாக அறநெறி பாடசாலைகள் இயங்கி வருகின்றது. அறநெறி பாடசாலையில் சமயம் சார்ந்த கற்கை நெறிகளும் சங்கீதம் நடனம் நாடகம் வில்லுப்பாட்டு போன்ற கலைகளும் பேச்சு கட்டுரை போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றது. மாணவர்களின் சமய சார் விழுமியங்களை கட்டிக்காக்கும் பொருட்டு குருபூசை தினம், தைப்பொங்கல் நவராத்திரி போன்ற தினங்களில் நிகழ்விகள் நடாத்தப்படுகின்றது. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பொருட்டு தேசிய ரீதியிலான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கிளானை ஞான வைரவர் அறநெறி பாடசாலையானது 09/10/2016 இல் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகிறது.
நவராத்திரி 2024 எமது அறநெறி பாடசாலையில் இனிதே இடம்பெற்றது. அதில் இருந்து சில காட்சிகள்.
no images were found
கிளானஞானவைரவர் ஆலய அறநெறிப்பாடசாலையின் வாணிவிழாவின் நிகழ்வுகள் 24.12.2023 அன்று மாலை 3மணிக்கு ஆரம்பமாகி பல நிகழ்வுகளுடன் இனிதே இடம்பெற்றது அருள் இருந்து சில காட்சிகள்.