நான் சோமசுந்தரம் குகானந்தன், கிளானையில் பிறந்துவளர்ந்து பின்னர் யுத்த சூழ்நிலையால் வெளிநாடுகளில் வாழ நேரிட்டது,  இருப்பினும் 2010 இன்  பின்னர் தாயகம் வரும்போது எல்லாம் கிளானை  வைரவரை வந்து  தரிசிக்காமல் சென்றதில்லை. சிறு வயதில் இருந்தே கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்திலேயே எமது இளம்  பிராயத்தை செலவிட்டோம். எப்போதும் மனதில் ஏக்கம் இருந்தது எமது ஊரைப்பற்றி விவரங்கள் சேகரித்து அதை ஓர் இடத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று? காலம் தன் வீச்சில் சுழன்று கொண்டே போகின்றது   இன்றை நவீன தொழில்நுட்ப வசதிகளின் அனுகூலத்தால் சமூக தொலைத் தொடர்பு சாதனங்களின் (facebook, whatsapp, viber)  ஊடாக  தொடர்புகளை நீடித்துக்கொள்கின்றோம். ஆனாலும் கிளானை எனும் இணையதளம் அமைத்து எமது கிராமத்தின் செழிப்பை எல்லோரும் அறியும் வண்ணம் செய்ய முடிவெடுத்தேன், அதனால் எனக்கு கிடைத்த தகவல்கள் படங்களை வைத்தும் இந்த இணையத்தை ஆரம்பித்துள்ளேன். இதை பார்த்து படிக்கும் நம் ஊரவர்கள் தம்மிடம் இருக்கும் கிளானை பற்றிய செய்திகள், படங்கள், கட்டுரைகள், ஒளிவடிவங்கள் மற்றும்  உலகெங்கும் பரவிவாழும் எம்மவர்களின் ஆக்கங்களையும் இங்கே பிரசுரிக்கலாம்.

கிளானையில்  காலம் காலமாக விவசாயமே முக்கிய தொழிலாகவும் வெற்றிலை தோட்டமுமே வாழ்விற்கு  முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், எத்தனையோ கல்விமான்களையும் தொழிலதிபர்களையும் வளர்த்தெடுத்தது எமது கிராமம். அதனால் இவர்களைபற்றிய ஆவணங்கள் செய்திகள் படங்கள் இருந்தால்  தயவுகூர்ந்து எமக்கு அனுப்பி வைக்கவும். எமது இணையத்தினூடாக இவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

சனசமூக நிலையம் பற்றி யாரவது எழுதி அல்லது விபரங்களை அறியத்தர முடியுமா?

நன்றி

 

தொடர்புகளுக்கு: info@kilanai.com எனும் முகவரிக்கு உங்கள் மின்னஞ்சலை அனுப்பவும்